Breaking News

புயலின் பெயர் ஃபனி

அட்மின் மீடியா
0
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.


இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
இது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும்.


இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளது.


ஃபனி புயல் ஏப்.,30 ம் தேதி தமிழக பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
புயல் கரையை கடக்கும் போது கடல் காற்று மணிக்கு 90 முதல் 100 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் மீனவர்கள் யாரும் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். என்று அறிவித்துள்ளார்கள்


மேலும் எதிர்வரும் ஏப்ரல் 30 ம் தேதியும் மே 1 ம் தேதியும் ரெட் அலர்ட்  எச்சரிக்கை  விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்

Give Us Your Feedback