ஏப்.19-இல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
அட்மின் மீடியா
0
ஏப்.19-இல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
ஏப். 22 முதல் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்றும் அதற்கு அடுத்த நாளே (ஏப்.20) மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசுத்தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கானத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஏப்.19) காலை 9.30 மணிக்கு
ஆகிய இணையதள முகவரியில் வெளியிடப்படவுள்ளன.
மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், வருடம் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பப்படும்.
தனித்தேர்வர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்தபோது அளித்திருந்த மொபைல் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
இதையடுத்து சனிக்கிழமை (ஏப். 20) காலை 9 மணி முதல் ஏப்.26-ஆம் தேதி வரையிலான நாள்களில் தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் வரும் 24-ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் 26-ஆம் தேதி வரையிலான நாள்களில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணை யதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வரும் 22-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் 24-ஆம் தேதி புதன்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்.