Breaking News

16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பத்தோடு உறவு வைத்துக் கொள்வது குற்றம் இல்லை

அட்மின் மீடியா
0
16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பத்தோடு உறவு வைத்துக் கொள்வது குற்றமாக கருதக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.


16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பத்தோடு உறவு வைத்துக் கொள்வது குற்றமாக கருதாத வகையில் போக்சோ சட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது.


நாமக்கல்லைச் சேர்ந்த சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ததாக சபரிநாதன் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் நீதிமன்றம் சபரிநாதனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.


இதை எதிர்த்து சபரிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.


இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சம்பந்தப்பட்ட பெண், தாம் விரும்பியே சபரிநாதனுடன் சென்றதாக நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்தார்.


இதையடுத்து,  16 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விருப்பத்தோடு உறவு வைத்துக் கொள்வது குற்றமாக கருதாத வகையில் போக்சோ சட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.


போக்சோ சட்டம்18 வயதுக்கு குறைவான குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டது ஆகும்.


இந்த சட்டத்தை உருவாக்கியதன் நோக்கம் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை வழக்குகளை விரைந்து விசாரித்து தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்பதாகும்.


போக்சோ சட்டப்பிரிவு 3 மற்றும் 4 -ன் படி குழந்தைகள் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தினால் 7 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை தண்டனை  விதிக்க வழிவகை செய்கிறது.

Give Us Your Feedback