அ.திமு.க தேர்தல் அறிக்கை
அட்மின் மீடியா
0
அ.திமு.க தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
- அதிமுக தேர்தல் அறிக்கையில் பின்வரும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- வறுமை ஒழிப்பிற்காக மாதம் ரூ.1500 வழங்கப்படும்.
- வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இந்த பணம் வழங்கப்படும்.
- புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: பயிற்சிகள் அளிக்கப்படும்.
- எம்ஜிஆர் தேசிய திறன் மேம்பாட்டு திட்டம் அமல்படுத்தப்படும்.
- வறட்சிக்கு எதிராக நீர் மேலாண்மை திட்டங்கள் கொண்டு வரப்படும்.
- கடலில் கலக்கும் நீர் வறட்சியால் பாதிக்கப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
- காவிரி - கோதாவரியை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- காவிரியில் இருந்து மோகனூர் கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.
- காவிரி இணைப்பு கால்வாய் திட்டம் கொண்டு வரப்படும்.
- கல்லூரி கல்வி கடன்களை ரத்து செய்வோம்.
- வேளாண் கடன்களுக்காக உறுதியான திட்டம் ஒன்றை கொண்டு வருவோம்.
- கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்துவோம்.
- எஸ்சி/ எஸ்டி/ பி.சி/ எம்.பி.சி மக்களுக்காக புதிய இடஒதுக்கீட்டு சட்டம் கொண்டு வரப்படும்.
- பொது சிவில் சட்டத்தை கொண்டு வர அனுமதிக்க மாட்டோம்.
- மத்திய அலுவல் மொழியில் ஒன்றாக தமிழை அறிக்கை வலியுறுத்துவோம்.
- காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க வலியுறுத்துவோம்.
- நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவோம்.
- சாதி சான்றிதழில் மாற்றம் செய்யாமல் மதம் மாற எதுவாக சட்டம் கொண்டு வரப்படும்.
- இலங்கை அகதிகளுக்கான நலவாழ்வு சட்டம் கொண்டு வரப்படும்.
- இலங்கை போர் குற்றத்தை விசாரிக்க மத்திய அரசு வலியுறுத்துவோம்.
- பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநரை வலியுறுத்துவோம்.
- புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்துவோம், என்று அதிமுக அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது
