Breaking News

பள்ளி தேர்வை முன்கூட்டியே நடத்த முடிவு

அட்மின் மீடியா
0

பள்ளி தேர்வை முன்கூட்டியே நடத்த முடிவு


மக்களவை தேர்தலை முன்னிட்டு 1 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப். 10-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வாக்குச் சாவடி பணிகள் வழங்கப்பட உள்ளன. 
இதற்கிடையே தேர்தல் முடிந்த அடுத்த நாளான ஏப்ரல் 19-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. 
இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 30-ம்தேதி தொடங்கி ஏப். 6-ம் தேதியுடன் முடிகிறது. 
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகளை ஏப்ரல் 10-க்குள் முடிக்கவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. 
 
இதற்கான முன்னேற்பாடுகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருவ தாக துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

Give Us Your Feedback