Breaking News

கல்வி கடன் ரத்து. நீட் தேர்வு ரத்து. திமுகவின் தேர்தல் வாக்குறுதி

அட்மின் மீடியா
0

திமுக கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று  வெளியிடப்பட்டது. பல்வேறு நலத்திட்டங்களை கொண்ட திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.


  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்
  • சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும்
  • பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
  • கார்பரேட் நிறுவனங்கள் புதிய சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்
  • கார்பரேட் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதிய சட்டம் கொண்டு வரப்படும்
  • மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம் கைவிடப்படும்
  • மாநில அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்
  • கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும்
  • மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும்.
  • தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு இடஒதுக்கீடு கொண்டு வரப்படும்
  • எல்பிஜி சிலிண்டர்களுக்கு பழைய விலை நிர்ணயம் செய்யப்படும். வங்கி கணக்கில் மானியம் அளிக்காமல், பழைய முறைப்படி மானிய விலை போக சிலிண்டர்கள் வழங்கப்படும்.
  • தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • கல்வித்துறையை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்
  • வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்
  • தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழும் பயன்படுத்தப்படும்
  • தமிழ் இணை ஆட்சி மொழியாக அறிவிக்கப்படும 
  • மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும். 
  • திருச்சி, மதுரை, கோவை, சேலத்தில் மெட்ரோ கொண்டு வரப்படும். 
  • கீழடியில் ஆய்வு தொடங்கி அருங்காட்சியகம் அமைக்கப்படும். 
  • கஜா போன்ற பேரிடிகளுக்காக தனி நிதி ஒதுக்கப்படும். 
  • இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும். 
  • சமூக ஊடகங்கள் வெளியிடும் ஆபாச செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 
  • 100 நாட்கள் வேலையில் குறைந்தபட்ச வேலை நாட்களின் எண்ணிக்கை 150 அதிகரிக்கப்படும். 
  • மதங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 
  • கேபிள் டீவி கட்டணம் மீண்டும் குறைக்கப்படும். 
  • பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
  • நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்

     

Give Us Your Feedback