Breaking News

ஆசிரியர் பணி வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்...

அட்மின் மீடியா
0
அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 




 2019 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வுக்கான(TET) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்த தேர்வின் மூலம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

இதற்கான எழுத்துத் தேர்வு தாள் 1, தாள் 2 என இரு தாள்களைக் கொண்டது.

தகுதிகள்: தாள் 1: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம். இவர்கள் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை பெறலாம். 150 மதிப்பெண்கள் கொண்டது.


தாள் 2: பட்டப்படிப்புடன், 2 ஆண்டு பி.எட் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் எழுத தகுதியானவர்கள். இவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை பெறலாம். 150 மதிப்பெண்கள் கொண்டது.

வயதுவரம்பு: 18 வயது நிரம்பியவர்களும், 40 வயதிற்குள் இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் பிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தாள் -1, தாள்- 2 என்று தனித்தனியே விண்ணபிக்க வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http//trb.tn.nic.in/TET_2019/tett2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 15.03.2019


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2019


Give Us Your Feedback