Breaking News

ஏடிஎம்  கார்டு இல்லாமல் ஏடிஎம் மெசினில் பணம் எடுப்பது எப்படி

அட்மின் மீடியா
0
ஏடிஎம்  கார்டு இல்லாமல் ஏடிஎம் மெசினில் பணம் எடுப்பது எப்படி

இனிமேல் SBI ATM-யில் பணம் எடுப்பதற்கு டெபிட் கார்டு தேவையில்லை


அதற்காக எஸ்.பி.ஐ வங்கி YONO என்கிற APP (செயலியை) அறிமுகம் செய்துள்ளது,


ஆப் டவுன்லோடு செய்ய




எஸ்.பி.ஐ-யின் YONO ஆப் டவுன்லோடு  செய்தபின் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசிக்கு 6 எண்கள் கொண்ட OTP வழங்கப்படும்,


அந்த OTP-யை ATM -யில் பதிவு செய்யும்போது, பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் SBI வங்கி தெரிவித்துள்ளது.


யோனோ கேஷ் பாய்ண்ட்களில் ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். ஒரு தடவைக்கு அதிகபட்சமாக ரூ.10000 வரை மட்டுமே எடுக்க முடியும்.


OTP வந்த அடுத்த 30 நிமிடங்களுக்குள் நாம் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கியின் யோனோ கேஷ் பாய்ண்டுக்கு சென்று 6 இலக்க OTP எண்ணைப் பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.


30 நிமிடங்களுக்கு மேல் கால தாமதமானல் யோனோ பாய்ண்ட்டில் பணம் எடுக்க முடியாது. திரும்பவும் 6 இலக்க OTP ரகசிய எண்ணை உருவாக்க வேண்டும்.

Share this