Breaking News

வைரல் ஆன பரிசு பெட்டி சின்னம்

அட்மின் மீடியா
0
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பரிசுப் பெட்டி சின்னம் இன்று தேசிய அளவில் டிவிட்டரில் வைரல் ஆனது.



அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் கொடுக்க முடியாது என்று உதேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ஆனால் அமமுகவிற்கு பொதுசின்னம் ஒன்றை கொடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தற்போது தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கி இருக்கிறது. இந்த சின்னம் கிடைத்தது டிடிவி தினகரன் தரப்பிற்கு பெரிய மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது.
சின்னம் கிடைத்த சில நிமிடத்தில் பலர் இதுகுறித்து டிவிட் செய்ய தொடங்கினார்கள்
  
மொத்தம் இரண்டு டேக்குகள் இதில் வைரல் ஆனது. #giftbox என்ற டேக் தேசிய அளவில் நீண்ட நேரம் டிரெண்டில் இருந்தது.
அதேபோல் #பரிசுப்பெட்டி என்ற டேக்கும் தேசிய அளவில் டிரெண்டில் இடம் பிடித்து சாதனை படைத்தது. இதில் பல்லாயிரம் டிவிட்டுகள் பகிரப்பட்டது.
  
என்ன செய்தனர்
இதேபோல் இணையத்தில் மட்டுமில்லாமல், களத்திலும் அமமுகவினர் இந்த சின்னத்தை தீவிரமாக டிரெண்ட் செய்து வருகிறார்கள். இப்போதே பல இடங்களில் இதற்காக சுவரொட்டிகள், போஸ்டர்கள் ஒட்டிவிட்டனர். பல இடங்களை இப்போதே அமமுகவினர் பரிசுப் பெட்டி மயமாக்கிவிட்டனர்.

Give Us Your Feedback