திப்பு சுல்தானின் ஆயுதங்கள் ஏலம்?
அட்மின் மீடியா
0
இங்கிலாந்தின் முக்கிய மாகாணங்களில் ஒன்று பெர்க்ஷைர் Berkshire பெர்க்ஷைரைச் சேர்ந்த தம்பதியர், தமது பழைமையான வீட்டின் பரணைச் சுத்தம் செய்தபோது, திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கவசத்தாலான வாள், தீக்கல்லியக்கத் துப்பாக்கி (flintlock gun), போர் வாள்கள் அடங்கிய எட்டு அரிய கலைப் பொருள்களைக் கண்டெடுத்தனர்.
இந்த அரிய கலைப் பொருள்கள் அனைத்தும் பல்வேறு தலைமுறையினரைக் கடந்து 220 ஆண்டுகளுக்குப் பிறகு பரணிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றன.
பெர்க்ஷைர் தம்பதியர் இந்தக் கலைப் பொருள்களை நிதி திரட்டும் நோக்கில் ஆண்டனி க்ரிப் ஆர்ம்ஸ் & ஆர்மர் (Antony Cribb Arms & Armour Auctions) எனப்படும் ஏலம் விடும் நிறுவனத்திடம் அளித்தார்கள்.
இந்த நிறுவனம் இன்று (26.3.2019) இக்கலைப்பொருள்களை ஏலம் விடுவதாக அறிவித்திருக்கிறது.
இந்த ஏலத்தைத் தடுத்து நிறுத்த இந்தியத் தூதரகம் முயற்சி மேற்கொண்டிருக்கிறது.
ஆண்டனி க்ரிப் ஆர்ம்ஸ் & ஆர்மர், பழம்பெருமை வாய்ந்த போர்க் கருவிகளையும், தளவாடங்களையும் ஏலம் விடும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஏலத்தை தடுத்து நிறுத்தி திப்புவின் வீரம் மிக்க ஆயுதங்களை இந்தியா கொண்டு வரவேண்டும்
அரிய கலை பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும்
திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி பதித்த வாள், அரிய துப்பாக்கி (flintlock gun), போர் வாள்கள் அடங்கிய எட்டு அரிய பொருள்கள் ஏலம் விடப்படுகின்றது
திப்புசுல்தானுக்கும் ஆங்கிலேயருக்கும் நடைபெற்ற கடைசிப் போர் `ஸ்ரீரங்கப்பட்டினம் போர்.’ இது இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த போராகும்.
இந்தப் போரில்தான் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார்.
இன்று இங்கிலாந்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏலம் விடப்பட இருக்கின்றன.
இந்த ஏலம் தடுக்கப்பட்டு, இந்த அரிய கலைப்பொருள்கள் அனைத்தும் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுமா என்ற ஆவல் அனைவரின் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
