கேஸ் சிலிண்டர் எப்போ வேணுமோ அப்போ டெலிவரி
அட்மின் மீடியா
0
சமையல் எரிவாயு சிலிண்டர்
புக் செய்துவிட்டு காத்திருந்த காலம் போய் இனிமேல் நமக்கு தேவையான நேரத்தில் சிலிண்டர்
டெலிவரி பெறும் சேவையை மத்திய அரசு எளிமையாக்கி உள்ளது.
சிலிண்டர் புக் செய்யும்போதே
எப்போது டெலிவரி செய்ய வேண்டும் என்ற நேரத்தையும் குறிப்பிடுவதால் சிலிண்டர் டெலிவரிக்காக
தேவையில்லாமல் காத்திருக்க வேண்டிய அவசியம் இனிமேல் கிடையாது.
தாங்கள் விரும்பும் நேரத்தில்
சிலிண்டர் டெலிவரி பெறுவதற்கு கூடுதல் கட்டணத்தையும் வாடிக்கையாளர்கள் செலுத்தவேண்டும்.
டெலிவரி பெறும் நேரத்திற்கு ஏற்ப டெலிவரிக்கான கட்டணமும் மாறுபடும்.
சிலிண்டர் புக் செய்யும்போதே
அதை எந்த நேரத்தில் நமக்கு டெலிவரி கொடுக்க வேண்டும் என்பதையும் சிலிண்டர் புக் செய்யும்
போதே குறிப்பிடவேண்டும்.
டெலிவரி கட்டணம்
காலை 8 மணிக்குள் சிலிண்டர்
டெலிவரி செய்யப்பட வேண்டும் என்றால் சென்னை போன்ற பெருநகரங்களில் ரூ.50ம், புறநகர்
மற்றும் பிற பகுதிகளில் ரூ.40ம் டெலிவரி கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள்
சிலிண்டர் டெலிவரி செய்ய வேண்டுமெனில் சென்னை போன்ற பெருநகரங்களில் ரூ.25ம், புறநகர்
மற்றும் பிற பகுதிகளில் என்றால் ரூ.20ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
மாலை 6 மணி முதல் 8 மணிக்குள்
சிலிண்டர் டெலிவரி செய்யப்பட வேண்டும் என்றால் பெரு நகரங்களில் ரூ.50ம், புறநகர் மற்றும்
பிற பகுதிகளில் என்றால் ரூ.40ம் டெலிவரி கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் சிலிண்டர் டெலிவரி செயயப்பட் வேண்டுமானால் பெருநகரங்களில்
ரூ.25ம், புறநகர் மற்றும் பிற பகுதிகளில் என்றால் ரூ.20ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்
மேலும் சிலிண்டருக்கான மானிய தொகை சரியாக வருகின்றதா என்பதை பார்க்க கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்
https://adminmedia1.blogspot.com/2018/11/blog-post_2.html
மேலும் சிலிண்டருக்கான மானிய தொகை சரியாக வருகின்றதா என்பதை பார்க்க கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்
https://adminmedia1.blogspot.com/2018/11/blog-post_2.html
