Breaking News

அ.ம.மு.க தேர்தல் அறிக்கை

அட்மின் மீடியா
0
அமமுக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது.


சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கொள்கைப்பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் செந்தமிழன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



அ.ம.மு.க தேர்தல் அறிக்கையில்,


பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தப்பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும்.


மத்திய, மாநில அரசுப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மாதம் 100 ரூபாய் மானியம் அளிக்கப்படும்.


தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூபாய் 2 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.


ஆசிரியர் தகுதி தேர்வு முறையில் மாற்றம் அல்லது ரத்து செய்யப்படும்.


அனைத்து விவசாய கடன்கள், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.


வயதான விவசாயத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 4 ஆயிரம் உதவித் தொகை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்


மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்; நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.


விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும், தொழிற்சாலையையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க நிரந்தர தடை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்

டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலம் என அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

7 பேர் விடுதலை மற்றும் இஸ்லாமிய கைதிகள் விடுதலை வலியுறுத்தப்படும், தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க நடவடிக்கை.


முதியோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000த்திலிருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும்


தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை, கொள்கை முடிவு எடுக்கப்படும்


பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க, கண்காணிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

இஸ்லாமியர்களின் நம்பிக்கையையும், வாக்குகளையும் ஈர்க்கும் வகையில் வாக்குறுதிகளை அளித்துள்ளது அமமுக

வக்பு வாரியம் மூலம் இஸ்லாமிய மருத்துவக்கல்லூரி, 

ஏழை எளிய முஸ்லீம்களுக்கு வீட்டு வசதி, 

இஸ்லாமிய கைதிகள் விடுதலை,

 இஸ்லாமியர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கைக்கு சட்ட அங்கீகாரம் 


மத்திய மாநில அரசு வேளைகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை


கிராமப்புற இளைஞர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கப்படும்

மெட்ரோ ரயில் திட்டம் கோவை, திருச்சி , மதுரைக்கு விரிவாக்கம், 

சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை


நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.



Give Us Your Feedback