Breaking News

மைதாவில் தயாராகும் உணவுப் பொருட்களை சாப்பிடலாமா?

அட்மின் மீடியா
0

மைதாவில் தயாராகும் உணவுப் பொருட்களை சாப்பிடலாமா? 

 

இன்றைய நவீன உலகில் எந்த உணவு உடலுக்கு நல்லது கெட்டது என்று தெரியாமலே பலர் வேகமாக பயனித்து கிடைப்பதை உண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்



மைதா உடலுக்கு கெடுதல் என்று சொல்கின்றார்களே அது உண்மையா?


மைதா எதிலிருந்து தயாராகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? 

 
மைதா என்பது கோதுமையில் இருந்து தயாராகிறது  நம்மூர் மைதா பெரும்பாலும் கோதுமையின் உட்புற ஸ்டார்ச்சில் இருந்து தான் தயாராகிறது
அதாவது கோதுமை மாவின் கழிவு தான் மைதா என்றே சொல்லலாம். கோதுமையில் இருந்து தயாரானாலும் கோதுமையின் சத்துக்கள் ஏதும் இதற்கில்லை.

கோதுமையில் நார்ச்சத்து, விட்டமின்கள், புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், அமினோ ஆசிடுகள் என்று உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் அனைத்தும்  இருக்கும்.

ஆனால் மைதாவில் அவை அனைத்தும் கோதுமை மாவாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பின் எஞ்சும் ஸ்டார்ச் போன்ற மஞ்சள் கலரில்  இருக்கும் மாவு மட்டுமே மிஞ்சுவதால் இதில் 100% ஸ்டார்ச் தவிர வேறு எந்த சத்தும் இருப்பதில்லை.

மைதாவில் கலந்திருப்பதாகக் கருதப்படும் ரசாயனங்கள்...

மைதாவுக்கு அதன் தூய வெள்ளைநிறம் பெறப்படுவதற்காக அதில் பென்ஸாயில் பெராக்ஸைடு எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.  இந்த பென்சோயில் பெராக்சைடு சீனா பிரிட்டன் உட்பட பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கோதுமையில் இருந்து மைதா பிரித்தெடுக்கப்படுகையில் கோதுமையின் வெளிர் மஞ்சள் நிறம் எஞ்சும். அந்த நிறத்தைப் போக்கி சுத்தமான வெண்மை நிறம் பெறவே இந்த பென்சாயில் ஃபெராக்ஸைடு மைதாவில் கலக்கப்படுகிறது. உடல்நலனைப் பொருத்தவரை இது மிக மோசமான பலன்களையே அளிக்கும்.


மேலும்  அலாக்ஸன் என்றொரு ரசாயனமும் மைதாவில் கலந்திருப்பதாகக் கருதப்படுகிறது. மைதாவை வெண்மை நிறமாக்க அதை ப்ளீச் செய்யும் போது அதிலிருந்து குளோரின் டை ஆக்ஸைடு வெளிப்படுகிறது. இந்த குளோரின் டை ஆக்ஸைடு மைதாவில் இருக்கும் ஸ்டார்ச்சுடன் வினை புரிந்து அலாக்ஸனாக மாறுகிறது. இந்த அலாக்ஸனும் மைதாவை வெள்ளை நிறமாக்க உதவக்கூடிய ஒருவகை ரசாயனமே. இது பென்ஸாயில் ஃபெராக்ஸைடை விட மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த அலாக்ஸன் தான் சர்க்கரை நோயை உருவாக்குகின்றது

மேலும் மைதாவில் சுவை கூட்ட அதனுடன் கலக்கப்படும் மற்றொரு ரசாயனம் மோனோ சோடியம் குளூட்டமேட். இந்த ரசாயனத்திற்கு மனித மூளைத்திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வல்லமை உண்டு.

அதேசம்யம் மற்ற உணவு பொருட்களில் கெமிக்கல்கள் இல்லாமல் இல்லைஅவை  மிகக்குறைந்த அளவே இருக்கும். அதே மைதாவை எடுத்துக் கொண்டால் அதில் கெமிக்கல்கள் தவீர வேறு இல்லை என்றே கூறலாம்.



மைதா உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுகிறவர்களுக்கு அல்சர், பித்தப்பைக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. நார்ச்சத்து அறவே நீக்கப்பட்ட மைதா உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ளும்போது நார்ச்சத்து பற்றாக்குறையும் ஏற்படும்.கல்லீரல் மற்ரும் கனைய பிரச்சனைகளும் ஏற்படும் எனவே மைதா உணவுகளை அறவே தவிர்ப்போம்


Tags: தமிழக செய்திகள் FACT CHECK

Give Us Your Feedback