அபிநந்தன் நாளை விடுதலை பாகிஸ்தான் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பாகிஸ்தானுக்கு போர் முக்கியம் இல்லை, அமைதிதான் முக்கியம், ஆனால்
நாங்கள் கோழை கிடையாது என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு
பிரதமர் இம்ரான் கான் பேசி இருக்கிறார். மேலும் பாகிஸ்தானில் சிறைப்பட்டு
இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு
அறிவித்து இருக்கிறது. நாளையே இவர் விடுதலை செய்யப்பட உள்ளார்.
நாங்கள்
மக்களின் நன்மை கருதியும், அமைதி கருதியும் பாகிஸ்தானில் உள்ள அபிநந்தனை
விடுதலை செய்கிறோம். நாளை அவர் விடுதலை செய்யப்படுவார், என்று இம்ரான் கான்
பேசி இருக்கிறார். அவையில் அவர் இதை கூறியது பெரிய கரகோஷம் எழுந்தது.
இந்தியா பாகிஸ்தானின் நாடுகளின் எல்லையான வாகாவில் வைத்து நாளை இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் அதிகாரிகளால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
