யாருக்கு வாக்களித்தோம் நாடளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அறிமுகம்
அட்மின் மீடியா
0
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தப்படும் - தேர்தல் ஆணையம்
இந்த வழக்கில் தேர்தல் ஆனையம் இதுதொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை பயன்படுத்துவது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ள உதவும் வகையில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இந்த வசதி அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் முறையாக அமைக்கப்படவில்லை. இந்த வசதியை தேர்ந்தெடுக்கப்படும் ஏதாவது ஒரு தொகுதியில் ஒரு வாக்குப்பதிவு மையத்தில் மட்டுமே செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால் கோவாவில் நடந்த தேர்தலின்போது அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எனவே 2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்த்துக் கொள்ள உதவும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை நாடு முழுவதும் உள்ள அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் அமைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கில் தேர்தல் ஆனையம் இதுதொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை பயன்படுத்துவது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்த தேர்தல் ஆணையத்தின் சார்பில் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
