Breaking News

பாகிஸ்தான் இராணுவம் அபிநந்னை கைது செய்யும் முன்பு நடந்தது என்ன

அட்மின் மீடியா
0
இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 7 கி.மீ தொலைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஹோரான் என்னும் கிராமத்தில் நேற்று காலை 8.45 மணியளவில் வானில் இரண்டு போர் விமானங்கள் ஒன்றோடு ஒன்று தீப்பற்றி எரிந்தபடி சண்டையிட்டுள்ளன. 




ஒன்று எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி விழவே, மற்றொரு விமானம் அதே இடத்தில் விழுந்துள்ளது. 

பாக்., பகுதியில் விழுந்த விமானத்தில் இருந்த இந்திய விமானி அபி நந்தன் பாராசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளார். 

அப்போது அங்கு கூடிய உள்ளூர் இளைஞர்களிடம் அபி நந்தன், இது இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என கேட்டுள்ளார். அங்கிருந்த உள்ளூர் இளைஞர், இது இந்தியா தான் என கூறவே, நிம்மதி பெருமூச்சு விட்ட அபிநந்தன், இந்தியாவில் இது எந்த பகுதி என கேட்டுள்ளார். 

மேலும் முதுகுப்பகுதி காயமடைந்துள்ளது.  குடிப்பதற்கு தண்ணீர் வேண்டுமென அவர்களிடம் கேட்டுள்ளார்.
அப்போது அங்கு குவிந்த இளைஞர் சிலர், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டபடி அபிநந்தனை நோக்கி கற்களை எடுத்து கொண்டு தாக்க முற்படவே, வானத்தை நோக்கி அபிநந்தன் சுட்டுள்ளார். 

துப்பாக்கியை காட்டியப்படி பின்னோக்கி அரை கிலோ மீட்டர் தூரம் சென்ற அபிநந்தன், குளம் ஒன்றில் குதித்து, தன் பையில் வைத்திருந்த வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை நீரில் போட்டும், சிலவற்றை வாயில் போட்டு முழுங்கவும் முயற்சித்துள்ளார். 

இதனிடையே கூட்டத்தில் இருந்த ஒருவன், அபிநந்தனின் காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் காயமடைந்த விமானியின் இரு கைகளையும் பிடித்து தூக்கி சிலர் தூக்கி வர, முரடர்கள் சிலர் அபிநந்தனை மூர்க்கமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். 

பின்னர் பாகிஸ்தான் ராணுவம் சம்பவ இடத்திற்கு வந்துவிடவே அபிநந்தனை மீட்டு காவலில் வைத்துள்ளனர். இருபுறமும் கைகோர்த்து பாகிஸ்தான் ராணுவம் ஜிந்தாபாத் என உள்ளூர் மக்கள் கோஷத்துடன் வழியனுப்பி வைத்துள்ளதாக பாகிஸ்தானின் டான் செய்தி வெளியிட்டுள்ளது.
 

இதனிடையே, பாகிஸ்தான் பத்திரிகைகளில், அபிநந்தன் பாதுகாப்பாகவும், நலமாக உள்ளார் எனவும், அவர் குறித்து ஓரிரு நாளில் முடிவு எடுக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Give Us Your Feedback