Breaking News

டிக் டாக் ஆபத்து

அட்மின் மீடியா
0
இன்றைய நவீன காலத்தில் ஒவ்வொருவரின் அலைபேசியிலும் இருக்கின்ற  அப்ளிகேஷனில் முக்கியமானதாக டிக் டாக் எனும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறியவர்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் இதை பயன்படுத்துகின்றனர்.

ஒரு வகையில் பொழுது போக்கு அம்சமாகவும், தனித்திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் அமைந்த இந்த செயலியில் சமீபகாலமாக சிலர் தரக்குறைவான, அருவருக்கத்தக்க வீடியோக்களை பதிவு செய்வதுதான் பிரச்சினைக்கு காரணம்.  
இந்த ஆப் மூலம் சமூகத்திற்கும் தனி மனித ஒழுக்கத்திற்க்கும் மிக மிக கேடான விஷயங்களே உள்ளன

அந்த ஆப் மூலம் ஏதாவது ஒரு நன்மை இந்த சமுதாயத்திற்க்கு உண்டா என்றால் இல்லை என்றே சொல்லலாம்

இதற்கு காரணம் இதில் பெண்களும் பயன்படுத்துவதுதான் இந்த பெண்கள் பயன்படுத்தும் போது இதில் மற்ற ஆண்கள் பார்க்கும் பொழுது தவறான நோக்கத்துடன் செய்யப்படும் ஒரு சில சதி வேலைகளில் அந்த பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி முடிவு கொண்டுவரப்படுகிறது.

அதாவது பெண்கள் ஆபாசமாக பேசுவதும், இரட்டை அர்த்ததுடன் பேசுவதும் ஆபாச நடனம் ஆடுவதும் நம் சமுதாயத்திற்க்கு கேடுதான்

நடிகைகள் கூட நடிக்க வெட்கப்படும் ஆபாச காட்சிகளில் கூட எந்த வித கூச்சமும் இன்றி சில இளம்பெண்கள் உடல்அசைவுகளை ஆபாசமாக காட்டி நடித்து வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.அதையும் பலர் பார்த்து ரசிக்கின்றார்கள்.

பெற்றோர்களே! பிள்ளைகளைச் செல்லமாகச் வளர்த்து விடலாம்.  அவர்களுக்கு நல்ல கல்வி கொடுத்துவிடலாம். ஆனால், நாம் பெற்ற குழந்தைகளைப் பண்பாடு உள்ளவர்களாக, ஒழுக்க நெறியைப் பின்பற்றுபவர்களாக, நம் பாரம்பரியம் கெட்டுவிடாதவர்களாக வளர்க்க வேண்டியது நம் கையில் தானே உள்ளது. 
அந்தரங்கமாக கருதும் படுக்கை அறை முதல் கழிவறை வரைக்கும் சென்று அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு பெருமையுடன் அதை வீடியோவாக வெளியிடுகின்றனர். 

இத்தகைய மோசமான செயல் டிக்–டாக் செயலியை பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள், குறிப்பாக சிறுவர்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இன்னும் சிலர் தங்களின் பெருமையை காட்டி கொள்வதற்காகவே சாதி, மத, அரசியல் உள்ளிட்ட காட்சிகளை வீடியோ எடுத்து அனுப்பி சர்ச்சையில் சிக்கி தவித்து வருகின்றனர். 

இப்படி வெளியிடப்படும் ஆபாச வீடியோக்களுக்கும், சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கும் ஆயிரக்கணக்கானோர் பகிர்வதாலும், லைக்குகள் குவிவதாலும் இதை ஆஸ்கார் விருது எனக்கருதி தொடர்ந்து நாகரிகத்தை பாழாக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த செயலி மாணவர்களின் மனதிலும் நஞ்சை விதைத்துள்ளதுதான் வேதனையின் உச்சம். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் ஒருவரை பிளஸ்–2 படிக்கும் மாணவர்கள் சிலர் கேலி செய்தும், மேஜை, நாற்காலிகளை இழுத்தும் தரக்குறைவான முறையில் நடந்து கொண்ட காட்சிகளை டிக்–டாக் வீடியோவாக பதிவேற்றம் செய்தனர். இதை பார்த்த பெற்றோர், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் 6 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆபத்தை உணராமல் விளையாட்டாக செய்த செயல் அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. 

இது ஒன்று மட்டுமா? இதுபோல் எத்தனையோ சம்பவம் நமக்கு சாட்சிகளாய், காட்சிகளாய் உணர்த்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் போலீஸ் ஜீப் மீது ஏறி உட்கார்ந்து டிக்–டாக் வீடியோ வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். டிக்–டாக் வீடியோவில் பலவிதமான காட்சிகளை நடித்து பதிவேற்றம் செய்த சென்னை பெண் ஒருவர், கள்ளக்காதல் மோகத்தில் தான் பெற்ற 2 குழந்தைகளையும் கொன்று இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார். 

இந்த டிக்–டாக் செயலியில் பெண் போல் நடித்த வாலிபர் ஒருவர் நண்பர்களின் கேலியால் தற்கொலை செய்து கொண்ட பரிதாபமும் நிகழ்ந்து உள்ளது. டிக்–டாக்கில் ஆபாச வசனங்களில் நடித்த பல பெண்கள் இன்று பல்வேறு குடும்ப பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். இது தெரியாமல் இன்னும் பலர் ஆபாச வசனங்களில் நடித்து பதிவேற்றம் செய்து வருவது தான் வேதனை அளிக்கிறது.
பெற்றோர்களே! இன்றைக்குப் பணம் சம்பாதித்துவிடலாம்! வசதியான வாழ்க்கைக்கு வழிவகுத்துவிடலாம்! பிள்ளைகளைச் செல்லமாகச் செல்வச் செருக்கோடு வளர்த்தும்விடலாம். பட்டம் பதவிகளை அவர்களுக்கு வாங்கியும் கொடுத்துவிடலாம்! ஆனால், நாம் பெற்ற குழந்தைச் செல்வங்களைப் பண்பாடு உள்ளவர்களாக, ஒழுக்க நெறியைப் பின்பற்றுபவர்களாக, ஆணோ பெண்ணோ கற்பொழுக்கத்தில் கரும்புள்ளி படியாதவர்களாக –சுருங்கக் கூறின் பாரம்பரிய மனித நாகரிகம் உள்ளவர்களாக- வளர்த்து ஆளாக்குவதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது.

Make Google view image button visible again: https://goo.gl/DYGbub

குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், 'டிக் டாக்' செயலியின் மீது, அதீத ஆர்வம் கொண்டுள்ளனர். 

இதனால், பல்வேறு குடும்பங்களில் பிரச்னை ஏற்படுகிறது. 

குற்ற செயல்களும் அதிகரித்துள்ளன. சமூக விரோதிகள் இந்த, 'டிக் டாக்'கில் வரும் பெண்களின் சுய விபரங்களை தவறாக பயன்படுத்துவதும் அம்பலமாகியுள்ளது.

டிக் டோக் பயன்படுத்துபவர்களை அவர்களை தேர்தெடுக்கும் வசனம், பாடல், அவர்களின் நடப்பை கொண்டு அவர்களின் மனோநிலை, குணாதிசயங்களை கணிக்க முடியும் என்று உளவியல் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆபாசமான வசனங்களுக்கு வாயசைத்ததால் தன்னுடைய வாழ்க்கையை துலைத்து நிற்க்கும் பெண்களும் நம்முன் இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் ஆபாசமான வசன வரிகள், நடனம் என்றால் மறுபக்கம் உயிர்சேதம் 

வித்தியாசமாக செய்தால் தான் ட்ரென்ட் ஆகுவோம் என்று கருதி கொண்டு முட்டாள் தனமாக ஓடும் வண்டியில் இருந்து ஏறுவது, இறங்குவது, ஆயுதங்கள் பயண்படுத்தி வீடியோ எடுத்து உயிர் விட்டு இறுதியாக அவர்கள் ட்ரென்ட் ஆகி அவர்கள் இறக்கும் வீடியோ வைரல் ஆகிறது.

ஜாலியாகவும் பொழுது போக்குக்காகவும் இந்த டிக்டாக் செயலியைப் பயன்படுத்தும் பலரும் விபரீத விளைவுகளால் காவல் துறையிடமும் சிக்கி எதிர்காலத்தை வீணடித்துக் கொள்கின்றனர் என்பதும் வேதனையை ஏற்படுத்துகிறது.

மேலும் டிக்டாக் விளைவுகள் பல உள்ளது அதில் சிலவற்றை லிங் மூலம் ஆதாரங்களாக இனைத்துள்ளோம்.

*ஆதாரம் 1*👇🏻

*டிக் டாக் ஆப்பில் கத்தியை வைத்து நடனமாடிய இளைஞர் கழுத்தை அறுத்து கொண்டார்*

*போலிஸ் ஜீப்பை நிறுத்தி டிக் டாக் வீடியோ எடுத்த 2 நபர்கள் கைது*

*ஆதாரம் 2*👇🏻

*ஆதாரம் 3*👇🏻

🔰 *பள்ளி மாணவ மாணவிகள் டிக் டாக் ஆப் பயன்படுத்த தடை*

*ஆதாரம் 4*👇🏻

*டிக்டாக் செயலியை உடனே தடை செய்யுங்கள்: ராமதாஸ் கோரிக்கை*

https://tamil.gizbot.com/apps/ramadoss-demands-ban-on-tiktok-app-says-it-leads-social-disaster-020354.html

நன்மைக்காக கண்டு பிடிக்கபட்ட ஒரு கண்டு பிடிப்பை நாம் நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டும். ஒரு வீடியோ இண்டர் நெட்டில் வந்து விட்டால் அது அழிக்கவே முடியாது. யாராவது எங்காவது ஷேர் செய்து கொண்டே இருப்பார்கள். அந்த வீடியோவால் நாளை உங்கள் வாழ்க்கை கேள்விகுறி யாகலாம். எனவே எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

Give Us Your Feedback