Breaking News

டிக் டாக் ஆப்புக்கு விரைவில் தடை

அட்மின் மீடியா
0
உயிரை கொல்லும் விளையாட்டான புளூவேல் கேம் தடை செய்யப்பட்டது போன்று டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிப்பு




முன்னதாக, இளைய தலைமுறையினரை சீரழிவுக்கு கொண்டு செல்லும் டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்றும்  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வந்தார்.


மேலும், டிக் டாக் செயலி மூலம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் பல்வேறு அமைப்புகளும் டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கி உள்ளன.

டிக்டாக்  வீடியோவினால் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது

காவல்நிலையம் வரை சென்று டிக் டாக் செய்தவர்கள் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது நினைவிற்குரியது.

சட்டசபையில் தமீமுன் அன்சாரி ( மனிதநேய ஜனநாயக கட்சி) இன்று பேசுகையில், டிக் டாக் மூலம் ஆபாச செயல்களும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதாகவும், எனவே, கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Give Us Your Feedback