Breaking News

இது தாங்க பட்ஜெட்

அட்மின் மீடியா
0

மத்திய பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

மத்திய அரசின் 2019 -20 ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் இன்று தாக்கல் செய்தார்

மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு

2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி வழங்கப்படும். இந்த தொகை ரூ.2000 வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

மீன் வளர்ப்பிற்கு தனித்துறை உருவாக்கப்படும்.

பசுக்களை பாதுகாக்க ராஷ்டிரிய கோகுல் திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு

பிரதமர் வேளாண் திட்டத்திற்கு ரூ.20,000 கோடி

கிராஜூட்டி வரிச்சலுகை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

அமைப்பு சாரா பணியாளர்களுக்கு பணி ஓய்விற்கு பிறகு பென்சன் கிடைப்பதற்காக மாதந்தோறும் ரூ.100 பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்விற்கு பிறகு மாதத்திற்கு ரூ.3000 பென்சன் வழங்கப்படும்.

பாதுகாப்புத்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு. தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்புத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

ரயில்வே துறைக்கு ரூ.64,587 கோடி ஒதுக்கீடு

2030 க்குள் எலக்ட்ரிக் வாகனங்கள் மயமாக்க அரசு இலக்கு

அனைத்து வருமான வரித்தாக்கல் முறைகளும் 24 மணிநேரத்தில் நிறைவு செய்யப்படும்.

அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான டிடிஎஸ் வரம்பு ரூ.10,000 லிருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்படும்.

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன் வழங்க நடவடிக்கை

2வது வீடு வாங்கினாலும் வரிச்சலுகை அளிக்கப்படும்

வீட்டு வாடகையிலிருந்து பெறும் வருமானத்திற்கு வரிச்சலுகை 1.8 லட்சத்தில் இருந்து 2.4 லட்சமாக உயர்வு

டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50,000 வரையிலான தொகைக்கு இனி வரிபிடித்தம் இல்லை.

வங்கி டெபாசிட்கள் மூலம் ரூ.40,000 க்கு மேற்பட்ட அனைத்து வருமானத்திற்கும் வரி உண்டு. ரூ.10,000 வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது.

தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு. ரூ.6.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்வதற்கு வரி இல்லை

நிரந்தர வருமான வரிக்கழிவு ரூ.40,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்வு

அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய

https://chat.whatsapp.com/5sKRhpw4xzf7YHBTq5why9

Give Us Your Feedback