Breaking News

தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 1 லட்சம் அபராதம்

அட்மின் மீடியா
0
பிளாஸ்டிக் தடையை மீறினால் அபராதம் விதிப்பதற்கான மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.





தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால்
1 லட்சம் அபராதம் விதிக்க சட்ட மசோதா இன்று சட்டமன்ற பேரவையில்
தாக்கல் செய்யப்ட்டுள்ளது.

இந்த சட்ட மோசோதாவில், 

சிறிய வணிக விற்பனையாளர்களால் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்ற வகைக்கு முதல் தடவைக்கு 100 ரூபாயும், இரண்டாம் முறைக்கு 200 ரூபாயும், மூன்றாம் முறைக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.


மளிகைக்கடைகள் மற்றும் மருந்துக் கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு

முதல் தடவை 1000 ரூபாயும்,
இரண்டாம் தடவை 2000 ரூபாயும்,
மூன்றாம் தடவை 5000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்.

வணிக வளாகங்கள், துணிக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்ற மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு

முதல் தடவை 10 ஆயிரம் ரூபாயும்,

இரண்டாம் தடவை 15 ஆயிரம் ரூபாயும்,

மூன்றாம் தடவை 25 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.



பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கிவீசப்பட்ட பிளாஸ்டிக்கை சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு

முதல்முறை சிக்கினால் 25 ஆயிரம் 
இரண்டாம் முறை 50 ஆயிரம் 
மூன்றாம் முறை சிக்கினால் 1 லட்சம் என அபராதம் வசூலிக்கப்படும் 
என கூறப்பட்டுள்ளது. 

பிளாஸ்டி தடை பற்றி  அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறையிலுள்ள நிலையில் தற்போது பிளாஸ்டிக் தடை மற்றும் அபராதம் தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Give Us Your Feedback