உங்கள் மொபைல் போனில் பென்சன் தொகை பார்பது எப்படி? வாங்க தெரிந்து கொள்லலாம்
அட்மின் மீடியா
0
ஒரு பணியாளர் கணக்கில் எவ்வளவு பி.எஃப் பணம் இருக்கிறது, நிறுவனத்தில்
இருந்து எவ்வளவு கணக்குத் தொகை வைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஈ.பி.எஃபின்
அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தகவல்கள் பெறலாம்.
அல்லது மிஸ்ட்கால் மூலமாகவும் உங்களின் கணக்கில் எவ்வளவு பணம் வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிந்து கொள்ளலாம்.
EPFO-ன் அதிகாரப்பூர்வ இ ணைய தளம் epfindia.gov.in என்ற இணையத்தில், இ.பாஸ்புக் என்ற பகுதி காட்டப்படும்.
அதை கிளிக் செய்தவுடன் லாக்-இன் டூ வியூ பாஸ்புக் என்பதை காட்டும்.
அதில் சென்றவுடன், UAN, பாஸ்வேர்ட், மற்றும் கேப்சா ஆகியவற்றை பதிவு செய்து உள்ளே செல்லவும்.
புதிதாக லாகின் செய்பவர்கள் முதலில் UAN – ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும். அப்படி ஆக்டிவேட் செய்ய Unified Member Portal செல்ல வேண்டும்.
அங்கு உங்களின் UAN எண், பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர், மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தால், உங்களுக்கான பாஸ்வர்ட் கிடைக்கும்.
ஆறு மணி நேரங்கள் கழித்து ஈ.பி.எஃப். ஆர்கனிசேசனில் மீண்டும் ஈ. பாஸ்புக் செல்லவும்.
அங்கு கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை அளித்து உள்ளே செல்லவும்.
அந்த பகுதியில் நீங்கள் உங்களின் மெம்பர் ஐடியை தேர்வு செய்து கொள்ளவும்.
அதனை தேர்வு செய்த பின்னர், உங்கள் நிறுவனம் பெயர் மற்றும் இதர தகவல்கள் கிடைக்கும்.
அதன் பின்பு அங்கு அப்டேட் செய்யபட்ட புதிய ஈ.பி.எஃப். பாஸ்புக் மற்றும் இருக்கும் பணத்தின் மதிப்பு ஆகியவை இடம் பெற்றிருக்கும்
.
.
7738299899 என்ற எண்ணிற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து EPFOHO UAN TAMஎன்று டைப் செய்து அனுப்பினால் உங்களுடைய பி.எஃப். பணம் குறித்த தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.
