ஒட்டக பால் இந்தியாவில் அறிமுகம்
அட்மின் மீடியா
0
அமுல் பால் நிறுவனம் முதன்முறையாக 500 மில்லி லிட்டர் பெட் பாட்டில்களில் ஒட்டகப் பாலை அறிமுகம் செய்திருக்கிறது.
500 மில்லி லிட்டர் பெட் பாட்டிலின் விலை 50 ரூபாய் ஆகும்,
பசும்பால் மற்றும் எருமை பாலை விட அதிக நன்மைகள் அடங்கியது ஒட்டக
பால். பலவித ஆய்வுகளும் பசும்பாலைவிட ஆரோக்கியமானது ஒட்டக பால் என்று
கூறியிருக்கின்றன.
ஒட்டகப் பாலில் அதிக அளவு இரும்பு, ஜின்க், பொட்டாசியம் , காப்பர் ,
சோடியம், மக்னீசியம் போன்றவை உள்ளன. பசும்பாலை விட அதிக புரத சத்து உள்ளது.
வைட்டமின் ஏ மற்றும் பி2 அதிகமாக உள்ளது. பசும்பாலை விட கொலெஸ்ட்ரால்
குறைவாக உள்ளது.
ஒட்டகப் பாலில் லாக்டோஸ் குறைவாக இருக்கும்.
ஒட்டகப் பாலில் நோய் எதிர்ப்பு புரதம் அதிகமாக உள்ளதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் கிருமிகளை உள்ளே வரவிடாமல் செய்கிறது.
ஆன்டிபாக்டீரியால் மற்றும் அன்டிவைரல் தன்மை பசும்பாலை விட அதிகம் உள்ளது.
ஆன்டிபாக்டீரியால் மற்றும் அன்டிவைரல் தன்மை பசும்பாலை விட அதிகம் உள்ளது.
தாய்ப்பாலுக்கு நிகரான தன்மை ஒட்டக பாலில் உள்ளதாகவும் ,
குடிப்பதற்கும் செரிமானம் ஆவதற்கும் எளிமையானது என்று கூறப்படுகிறது.
விட்டமின் பீ, சி சத்துக்களை நிறையக் கொண்ட ஒட்டகப் பாலில், பசுப் பாலில்
இருப்பதைவிட பத்து மடங்கு அதிகமான இரும்புச் சத்து இருக்கின்றது மேலும்
ஒட்டகப் பாலில் இன்சுலினுக்கு இணையான புரதம் இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை செய்யும்" எனத் தெரிவித்திருக்கிறது.
பசும்பாலை விட இனிப்புக் குறைவான ஒட்டகப் பால், வளைகுடா
நாடுகளெங்கும் அபரிதமாக அருந்தி வருகின்றார்கள்.
இந்தளவுக்கு மனித இனத்தின் ஆரோக்கியத்திற்காக அபரிமிதமான சத்தையும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தப் பாலை வழங்கக் கூடிய ஒட்டக பால் இனி இந்தியாவில் விரைவில் தமிழக்த்திலும் கிடைக்க உள்ளது.
