சட்டசபையில் பெருபான்மை இழந்த தமிழக அரசு
ஒசூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்த அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி பறிபோயுள்ளதால், தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாகியுள்ளன.
இதனால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி முற்றியுள்ளது.
2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அதிமுக 115 தொகுதிகளை வென்றது. இதையடுத்து 88 தொகுதிகளை வென்ற திமுக 2வது பெரிய கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளை வென்றது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு தொகுதியிலும்,
சுயேச்சை ஒரு தொகுதியிலும் வென்றனர்.
அதன் பின்பு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எல்லாம் தலைகீழாக மாறியது.
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக செயல்பட்ட 18 அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ போஸ், மற்றும் திருவாரூர் சட்டசபை தொகுதியில் திமுக உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் மரணமடைந்தனர். இதனால், காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 20ஆக அதிகரித்தது.
பாலகிருஷ்ண ரெட்டி எம்எல்ஏ பதவியை இழந்துள்ள நிலையில், சட்டசபை பலம் 213ஆக குறைந்துள்ளது.
இதில் பெரும்பான்மையை நிருபிக்க 107 எம்எல்ஏக்கள் பலம் தேவை. பாலகிருஷ்ண ரெட்டியும் பதவி பறிகொடுத்துள்ள நிலையில், அரசுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் பலம் 101 என்ற அளவில் சரிந்துள்ளது.
இப்படியான சூழலில், எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமா, அல்லது இடைத் தேர்தலுக்காக காத்திருக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் எழுந்துள்ளது.
அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில்.இனைய