நியூஸ் பேப்பரில் உணவு பொருட்கள் விற்பனை செய்யதடை
அட்மின் மீடியா
0
செய்திதாள்கள், காகித தாள்கள், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக்களில்
உணவு பொருட்களை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என இந்திய உணவு
பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.
தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் புதிய வழிமுறைகளை வகுக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக செய்திதாள்கள், காகித தாள்கள், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக்களில் உணவு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு வர்த்தக நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உணவு பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் உள்ள கன உலோகங்கள் மற்றும் வேதி பொருட்கள் உணவு பொருட்களில் கலப்பதாக இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு பேக்கிங்
செய்யப்பட்ட பொருட்களில் 13.4 சதவீதம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய
பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில்.இனைய
