Breaking News

மொபைல் போன் கதிர்வீச்சில் இருந்து பாதுகாப்பது எப்படி

அட்மின் மீடியா
0
மொபைல் போன் பயன்படுத்துவதிலும் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டியுள்ளது. அப்படி செய்வதன் மூலம் ரேடியேசன் – கதிர்விச்சிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்



மொபைலில் பேட்டரி சார்ஜ் 15 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளபோது அதிக அளவு கதிர்வீச்சு வெளிப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே பேட்டரி சார்ஜ் குறைவாக உள்ள போதும் மொபைலை பயன்படுத்த கூடாது 
அதிக நேரம் மொபைலில் பேசும்போது கதிர்வீச்சின் பாதிப்பானது அதிகரிக்கும்
எனவே அதிக நேரம் போனில் பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
பொதுவாக மொபைலை தலையனைக்குக் கீழ் அல்லது அருகில் வைத்தபடி உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
சார்ஜ் போட்டுக்கொண்டே மொபைல் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
கதிர்வீச்சின் பாதிப்பு குழந்தைகளுக்கு  இரு மடங்கு இருக்கும் என்பதால், குழந்தைகள் மொபைல் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பது நலம்.
செல்போன்களை சட்டையின் இடதுபக்க பாக்கெட்டில் வைத்தால், கதிர்வீச்சின் மூலம் இதயம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. 
அதிக நேரம் மொபைலில் பேசவேண்டியிருந்தால் ஒரே காதில் வைத்துப் பேசாமல், சிறிது நேர இடைவெளியில் இரண்டு காதுகளிலும் மாற்றி மாற்றி வைத்துப் பேசவும்.

வழக்கத்தை விட அதிகம் சூடாகும் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
அதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போனை குறித்து தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் போன்களில் இருந்து அது அதிகமாக ரேடியேனை வெளியிட்டால், அது உங்களுக்கு ஆபத்து ஆகும்.


உங்கள் போனில் *#07# என்று டயல் செய்தால் அதில் 1.6 வாட்ஸ் என்ற அளவை விடக் குறைவான கதிர்வீச்சு குறிப்பிட்டிருந்தால் உங்கள் மொபைல் பாதுகாப்பானது. அதனை விட அதிகமாக இருந்தால் உங்கள் போன் அதிகளவு கதிர்வீச்சை வெளிபடுத்துகின்றது என்று அர்த்தம்  இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாவிட்டாலும், அதன் பாதிப்புகளில் இருந்து முடிந்தவரை நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.

மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய



Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback