Breaking News

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த 2 பெண்கள் வீடியோ

அட்மின் மீடியா
0
இரண்டு பெண்கள், நேற்று அதிகாலை, சபரிமலையில் தரிசனம் நடத்தினர். இதனால், ஒரு மணி நேரம் நடை அடைக்கப்பட்டு, பரிகார பூஜை நடத்தப்பட்டது.


அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 


சபரிமலையில், 10  முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் வரக்கூடாது என்பது  பல ஆண்டுகளாக உள்ள ஐதீகம்.


இதனால் பல போராட்டங்கள் நடந்தன.போராட்டம் வலுத்ததால், சபரிமலையில், கோவில் வளாகத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் தான், நேற்று அதிகாலை இரண்டு பெண்கள் தரிசனம் செய்துள்ளார்கள்





https://www.youtube.com/watch?v=evohyDpt2po&feature=youtu.be


 
யார் அந்த பெண்கள்:

கேரளா கோழிக்கோடு சேர்ந்தவர், பிந்து வயது 42. 

கேரளா கண்ணுாரை சேர்ந்தவர், கனகதுர்கா வயது 40. 

இருவரும் கேரள அரசு ஊழியர்கள். கடந்த மாதம், இருமுடியுடன் தரிசனத்துக்கு வந்த இவர்கள், சன்னிதானம் அருகே, சந்திராங்கதன் ரோடு வரை வந்து விட்டனர். 

இங்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தியதால், சன்னிதானம் செல்ல முடியவில்லை. 

இந்நிலையில் நேற்று பம்பையில் இருந்து சீருடை அணியாத போலீஸ் பாதுகாப்புடன் இவர்கள், அதிகாலை, 3:00 மணிக்கு, சன்னிதானம் வந்தனர்.
பின், 3:30 மணிக்கு, தேவசம் போர்டு ஊழியர்களுக்கான நுழைவு வாயில் வழியாக, கொடிமரம் அருகே சென்று, அங்கிருந்து முன்வாசல் வழியாக, அய்யப்பனை தரிசனம் செய்தனர். 

இந்த செயலை கண்டித்து இன்று கேரளாவில் பந்த் நடைபெறுகின்றது.

அட்மின்மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய


Give Us Your Feedback