18 தொகுதிகளுக்கு இடை தேர்தல் எப்போது
லோக்சபா தேர்தலுடன் 18 தொகுதி இடை தேர்தல் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் பதில்
திருமங்கலம் அருகே, மதிப்பனுாரை சேர்ந்த, வேதா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, அ.தி.மு.க.,வின், 18 எம்.எல்.ஏ.,க்கள், 2017ல் கவர்னரிடம் மனு அளித்தனர். 18 பேரையும், சபாயநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி
செய்தது.
இதை எதிர்த்து, 18 பேரும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.
தொகுதியில் மக்கள் பிரதிநிதி இல்லாமல், காலி இடம் ஏற்பட்டால், ஆறுமாதங்களில் இடைத் தேர்தல் நடத்த வேண்டும். 18 தொகுதிகள், 2017ல் இருந்து காலியாக உள்ளன.
இதனால், அத்தொகுதி மக்களின் குறைகளுக்கு தீர்வு காண முடிய வில்லை. தேர்தல் கமிஷன் காலம் தாழ்த்துகிறது. 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரனை செய்த நீதிபகள் முன்பு ஆஜாரான தேர்தல் ஆனைய வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில்
எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ததை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உள்ளது. அந்த உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து, முடிவெடுக்க, தேர்தல் கமிஷனுக்கு, ஏப்., 24 வரை கால அவகாசம் உள்ளது.
மேலும்,18 பேரும்,உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் உள்ளது.
எனவே லோக்சபா தேர்தலுடன்,18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் திட்டம் உள்ளது. என்று கூறினார் இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய