பொங்கல் பரிசு ரூபாய் 1000 தமிழக அரசு அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான, தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது
அதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை தொடர்ந்தார்.
பச்சரிசி, சர்க்கரை, மற்றும் சிறப்பு பொருட்களுடன் குடும்பத்துக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு திருவாரூர் தவிர அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அறிவித்துள்ளார்
தற்போது, திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டம் நீங்களாக ஏனைய 31 மாவட்டங்களில் இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும்
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பிறகு, அந்த மாவட்டத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தொகுப்பில் உள்ள பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இருக்கும்
8-ந் தேதி சட்டசபை கூட்டம் முடிந்த பிறகு, அடுத்த சில நாட்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் இந்த திட்டத்தை தொடங்கிவைக்க இருக்கிறார். உடனேயே, ரேஷன் கடைகளிலும் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களும், ரூ.1000 ரொக்கப் பணமும் வழங்கப்பட இருக்கிறது.
அட்மின்மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய