இனி தலாக் சொன்னால் 3 ஆண்டு ஜெயில் மசோதா நிறைவேறியது
அட்மின் மீடியா
0
முத்தலாக் மசோதாவில் 3 மாற்றங்கள் செய்து சட்ட மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மூன்று திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
1. இந்த சட்டத்தின் படி, குற்றஞ்சாட்டப்பட்டவரின் மனைவி, இல்லை மனைவியின் நெருங்கிய உறவினர் மட்டுமே புகார் அளிக்க முடியும். வேற்று நபர் புகார் அளிக்க முடியாது.
2. அதேபோல் கணவனும் மனைவியும் வழக்கின் போது சமரசம் அடைந்து கொண்டால், வழக்கை திரும்ப பெற முடியும்.
3.மூன்றாவதாக மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் மனைவியின் அனுமதியுடன் கணவனை பெயிலில் விடுவிக்க முடியும், ஆகிய மூன்று மாற்றங்கள் இந்த சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு கடும் அமளி , கடும் எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா மீது விவாதம் நடந்து 4 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பின்னர் நடந்த ஒட்டெடுப்பில் மசோதாவிற்கு ஆதவராக 245 பேரும், எதிராக 11 பேரும் ஓட்டளித்தனர். ஓட்டெடுப்பு துவங்கும் முன்னதாக காங்., சமாஜ்வாடி , அதிமுக, உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இறுதியாக முத்தலாக் தடை மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
காங் எம்.பி சுஸ்மிதா தேவ் பேச்சு
முத்தலாக் மசோதாவிற்கு எதிராக பேசிய காங்கிரஸ் எம்.பி சுஸ்மிதா தேவ் ''இந்த
சட்டத்தில் பல விஷயங்கள் தெளிவாக இல்லை. கைது எப்போது செய்ய வேண்டும்
என்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்களை இதில் தெளிவாக இல்லை.
முக்கியமாக இது இஸ்லாமிய பெண்களை காப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. மாறாக
இஸ்லாமிய ஆண்களை கைது செய்ய வேண்டும் என்று கொண்டு வரப்பட்டுள்ளது'' என்று
கூறினார்.
அதிமுக எம்.பி. அன்வர் ராஜா
முத்தலாக் மசோதாவிற்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி அன்வர் ராஜா முத்தலாக் சட்டம் என்பது இந்திய அரசியல்
சாசனத்திற்கு எதிரானது. இந்த நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க
கூடியது இந்த வடிவத்திலேயே, அதிமுக இச்சட்ட மசோதாவை ஏற்க தயாராக இல்லை.
எனவே தேர்வு கமிட்டிக்கு சட்ட மசோதாவை அனுப்பி வைக்க வேண்டும், அல்லது,
சட்ட மசோதாவை கைவிட வேண்டும். இதே வடிவத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டால்
அது பல குடும்பங்களை அழித்து விடும். கணவர் சிறைக்கு அனுப்பப்பட்டால்,
மனைவியை, குழந்தைகளை யார் பராமரிப்பார்கள்? அந்த குடும்பத்திலுள்ள பிறரை
யார் கவனிப்பார்கள் என்பது குறித்தெல்லாம் இந்த சட்டம் கவலைப்படவில்லை.
Tags: இந்திய செய்திகள்
