சென்னையில் இரண்டு நாள் குடிநீர் தட்டுப்பாடு மெட்ரோ எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
சென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை மெட்ரோ எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் வரும் 27-ம் தேதி காலை 6 மணி முதல், 28-ம் தேதி காலை 6 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
இதனால்
மயிலாப்பூர்,
மந்தைவெளி,
திருவான்மியூர்,
கொட்டிவாக்கம்,
பாலவாக்கம்,
பெருங்குடி
அடையாறு
வேளச்சேரி
பெசன்ட் நகர்
சோழிங்கநல்லூர்
ஈஞ்சம்பாக்கம்
நீலாங்கரை
உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.