மெரினாவில் போராட்டம் இனி இல்லை
இனி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் மெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
இதனைத் தொடர்ந்து போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அய்யாக்கண்ணு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது.
மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேலும் மேல்முறையீட்டு மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.