தமிழகத்துக்கு மீண்டும் புயல் ஆபத்து
அட்மின் மீடியா
0
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது.
இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுப்பெறக்கூடும் இது புயலாக மாறுமா என்று 12-ம் தேதிக்கு பிறகே தெரியவரும். என்று அறிவித்துள்ளது
தன்னார்வ அடிப்படையில் வானிலையை கணித்து கூறி வரும் வானிலை ஆர்வலர் ந.செல்வகுமார் வங்கக்கடலில் நிலவும் காற் றழுத்த தாழ்வுநிலை தீவிரமடைந்து, 13-ம் தேதி பெதாய்’ புயலாக மாறும்.
அரபிக்கடல் காற்றின் சாதகம் மற்றும் தமிழக தரைப்பகுதி வெப்பநிலை உயர்வு காரணமாக அந்த புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு உள்ளது.
தற்போதைய ஆய்வு முடிவின்படி, இந்தப் புயல் நாகப்பட்டினம் - கடலூர் இடையே 15-ம் தேதி பிற்பகல் கரையைக் கடக்கலாம்.
இது திருச்சி, நாமக்கல், சேலம், கோவை, நீலகிரி வழியாக அரபிக்கட லுக்கு செல்லும். இதன் காரண மாக தமிழகத்தில் கனமழை பெய்யும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில்
நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து
கொள்ளுங்கள்
