Breaking News

முத்தலாக் மசோதா நாளை தாக்கல் செய்யபட உள்ளது

அட்மின் மீடியா
0
முத்தலாக் மசோதா நாளை லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் செய்யப்பட உள்ளது. 


இஸ்லாத்தில் இல்லாத முத்தலாக் என்ற ஒன்றை இருப்பது போல் காட்டி ஆட்டுக்கு காவல் ஓநாய் என்பது போல் வெளிகாட்டும் அரசை என்ன வென்று சொல்ல

தலாக் என்றால் என்ன 

தலாக் மூலம் ஓர் ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்யலாம்.
ஒரு முறை தலாக் சொல்வதற்கும் மறுமுறை சொல்வதற்கும் மூன்று மாத கால இடைவெளி இருக்க வேண்டும். இது அவர்களின் மன மாற்றத்திற்கு வழங்கப்படும் கால அவகாசம் ஆகும் அதே போல் இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து கேட்பது 'குலா' எனப்படும்.


இந்த முறைக்கு எதிராக மத்திய பாஜக அரசு கடந்த செப்டம்பர் மாதம் மசோதா தாக்கல் செய்தது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.




ஆனால் மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால் இந்த மசோதா தோல்வி அடைந்தது.

இந்த மசோதா தேவையற்றது என்று நாடெங்கும் இஸ்லாமியர்கள் போராட்டங்கள் செய்தார்கள் ஆர்பாட்டம் செய்தார்கள் ஆனால் அதையும் மீறி மத்திய அரசு மதோதாவை தாக்கல் செய்தது

இதையடுத்து மத்திய அரசு இதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்து, முத்தலாக் முறைக்கு தடை விதித்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தம் ஒப்புதல் வழங்கினார்.

ஆனால் அவசர சட்டம் ஆறு மாதத்திற்குள் காலாவதியாகிவிடும் என்பதால் இந்த சட்டத்தை மீண்டும் மசோதாவாக தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது.

நாளை நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.


மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback