பேஸ்புக் லைவில் இளைஞர் தற்கொலை அதிர்ச்சி வீடியோ
அட்மின் மீடியா
0
கஜா புயலில் பாதிக்கப்பட்ட இளைஞர் இனியவன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் வீடியோ
புயல் அடித்து பல நாட்களாகியும் உணவின்றி, நீரின்றி, வசிப்பிடமின்றி மக்கள் பரிதவித்து நின்ற வேளையில், நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து தலைஞாயிறு பகுதியில் போராடத்தில் பங்கேற்றார். நிவாரணம் கேட்டு போராடிய மக்கள் போராட்டங்களில் குதித்தனர்.
போரடகாரர்களை அடக்க சட்டம் ஒழுங்கை காக்க போராட்டகாரர்களை போலீஸார் கைது செய்ததால் அங்கு மேலும் பரபரப்பு கூடியது.
இதில் இளைஞர் இனியவனின் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது. போலீஸ் அவரை தீவிரமாக தேடி வருகிறது. இதனால் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாகவே சுற்றி வருகிறார்.
இந்நிலையில்தான், நேற்று இரவு 8 மணி அளவில் தனது முகநூல் பக்கத்தில் இனியவன் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.அதில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தன்னையும், தன் குடும்பத்தையும், தங்களைப் போன்ற பலரையும் இந்த தமிழக அரசும், காவல்துறையும் தீவிரவாதிகளைப் போல தேடி வருவதாகவும், இந்த வேதனை தாங்காமல் தான் விஷம் குடித்து சாகபோகின்றேன் என்று கூறி லைவ் வீடியோவில் விஷம் குடிக்கின்றார்
கண்ணீர் மல்க பேசும் அவர், தன் மரணத்தின் மூலமாகவேனும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்
இனியவன் எந்த ஊரில் தலைமறைவாக இருக்கிறார் என்பது தெரியாத நிலையில், அவரது தற்போதைய உடல்நிலை என்ன என்பது குறித்து உடனடி விவரங்கள் கிடைக்கவில்லை.
மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில்
நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து
கொள்ளுங்கள்