பேஸ்புக் காதலை கண்டித்த தாயை கத்தியால் குத்தி கொன்ற மகள்
அட்மின் மீடியா
0
திருவள்ளூர் அருகே ஃபேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை
காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்த மகளை
போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம்
8-ஆவது தெருவை சேர்ந்தவர் திருமுருகநாதன். இவர் தனியார் நிறுவனத்தில்
பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானுமதி. இவர்களது இரண்டாவது மகள் தேவிப்பிரியா கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் பகுதியைச்
சேர்ந்த விவேக் என்பவருடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில்
காதலாக மாறியது. இதனால் இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்
இதனை பானுமதி கண்டித்தும் அதனை ஏற்க மறுத்த தேவிப்பிரியா, காதலுனுடன்
வீட்டை விட்டு வெளியேறுவது என முடிவெடுத்துள்ளார். காதலன் விவேக் மைசூரில்
இருப்பதால் தனது நண்பர்களான விக்னேஷ் மற்றும் சதீஷை தேவிப்பிரியாவை
அழைத்து வர அனுப்பியுள்ளார்.
காதலனின் நண்ப்ரகளுடன் சேர்ந்து தேவிப்பிரியா வீட்டை விட்டு தப்ப முயற்சிக்கையில், பானுமதி தடுத்தபோது அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது கத்தியால் குத்தப்பட்டதில் பானுமதி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
காதலனின் நண்ப்ரகளுடன் சேர்ந்து தேவிப்பிரியா வீட்டை விட்டு தப்ப முயற்சிக்கையில், பானுமதி தடுத்தபோது அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது கத்தியால் குத்தப்பட்டதில் பானுமதி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த பானுமதியை மீட்டு திருவள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பாதி வழியிலேயே உயிரிழந்தார்.
இதில் கொடுமை என்ன வென்றால் தேவிபிரியா இதுவரை அவரது காதலனை நேரில் பார்க்கவில்லை போனில் தான் அறிமுகம் பார்காத காதலுனுக்காக்
பெற்ற தாயையே, மகளை கொன்றுவிட்டு தப்ப முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களை
அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில்
நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து
கொள்ளுங்கள்
