Breaking News

முகமது அக்லக் கொலை வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் திட்டமிட்டு படுகொலை?

அட்மின் மீடியா
0


உத்தர பிரதேசத்தில் நேற்று மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் உள்பட 2 பேரை பசு பாதுகாவலர்கள் போர்வையில் கலவர கும்பல்  கொன்றுள்ளது
 


 
 
அந்த கொலையை செய்த வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

பசு குண்டர்களால் கொல்லப்பட்ட அந்த  இன்ஸ்பெக்டர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாத்ரியில் நடந்த முகமது அக்லாக் கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரி ஆவார்

 

 

உத்தரப்பிரதேசத்தில் பசு இறைச்சி வைத்திருந்ததாகக் கூறி கடந்த 2015ம் ஆண்டு பசு குண்டர்களால் அடித்துக்கொல்லப்பட்ட முகமது அக்லக் வழக்கை விசாரித்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் புலந்த் சாகர் வன்முறையில் திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்று அவரின் சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

2015-ம் ஆண்டு, செப்டம்பர் 28-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், தாத்ரியில் 55 வயதான முகமது அக்லக் என்பவர் வீட்டில் பசு மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பசு குண்டர்கள் அவரை அடித்துக்கொன்றனர். வீட்டுக்குள் இருந்த முகமது அக்லக்கையும், அவரின் மகன் தானிஷையும் வெளியே இழுத்து வந்து பசு குண்டர்கள் அடித்து உதைத்தனர். இதில் அக்லக்கின் மகன் மட்டும் உயிர்பிழைத்தார், அக்லக்கொல்லப்பட்டார்.

அடித்துக்கொல்லப்பட்ட முகமது அக்லக் வழக்கை புலந்த்சாகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் விசாரித்து வந்தார்.


இந்நிலையில் நேற்று புலந்த்சாகரின் சிங்கராவதி பகுதியில் உள்ள ஒரு வயல்பகுதியில் பசுமாட்டின் உடல்பகுதிகளும், கன்றுக்குட்டியின் உடலும் இருந்ததாக் கூறி நேற்று ஒரு கும்பல் சாலை மறியல் செய்தது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைக்க வந்த போலீஸார் மீது அந்தக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது,

சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்களுக்குத் தீ வைத்து அந்தக் கும்பல் வன்முறை வெறியாட்டம் நடத்தினார்.


அதேசமயம், வன்முறையாளர்கள் கல்வீசி நடத்திய தாக்குதலில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் காயமடைந்த் நிலையில் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.


இந்நிலையில், முகமது அக்லக் வழக்கை விசாரித்த சுபோத் குமார் சிங் கலவரத்தை அடக்கச் சென்றபோது கல்வீச்சில் கொல்லப்பட்டாரா அல்லது திட்டமிட்டு இவரைக் கொல்ல வேண்டும் என்பதற்காகக் கலவரம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகத்தை இன்ஸ்பெக்டரின் சகோதரி எழுப்பியுள்ளார்.

முதல்வர் ஆதித்யநாத் எப்போது பார்த்தாலும் பசு மாடு ,பசு மாடு என்றே இருக்கிறார் என்னுடைய சகோதரர் சுபோத் குமார் சிங் முகமது இக்லக் கொலை வழக்கை விசாரித்து வந்ததால் அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார். இதில்சதி நடந்திருக்கிறது. என் சகோதரர்கொல்லப்பட்டதற்காக அரசு அளிக்கும் பணம் தேவையில்லை, அவரைத் தியாகி எனஅறிவிக்க வேண்டும்.என்று கூறினார் மேலும்

கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் மகன் அபிஷேக் கூறுகையில் “ மதத்தின் பெயரால் எந்தவிதமான வன்முறையும் நிகழக்கூடாது என்பதில் கவனமாக என் தந்தை இருந்தார். நல்ல குடிமகனாக வாழ வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். ஆனால், இன்று இந்து, முஸ்லிம் கலவரத்தால் என்தந்தை அடித்துக்கொல்லப்பட்டார். நாளை யாருடைய தந்தை அடித்துக் கொல்லப்படப் போகிறார்களோ தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி : hindu Tamil https://tamil.thehindu.com/india/article25661828.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers



மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்

Give Us Your Feedback