இனி குழந்தைக்கு, செக்ஸ் டார்ச்சர் அளித்தால் மரண தண்டனை
அட்மின் மீடியா
0
இனி குழந்தைக்கு, செக்ஸ் டார்ச்சர் அளித்தால் மரண தண்டனை
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை காக்க கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டத்தில், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனையாகவும் இருந்தது.
தற்போது இதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால், மரண தண்டனை வழங்க போக்சோவிலுள்ள 4,5,6 சட்ட பிரிவுகளில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
அட்மின்மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய
