Breaking News

வங்கி விடுமுறை தினத்தில் ஏற்படும் பணதட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படி

அட்மின் மீடியா
0

வங்கி விடுமுறை நாட்களில் நமக்கு ஏற்படும் பணத்தட்டுப்பாட்டை சமளிப்பது எப்படி நமக்கு பணம் கிடைக்க எளிய 6 வழி முறைகள்*

1.டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம்மில் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்
ஏடிஎம்களிலும் பணம் இல்லை என்றால் ஒரே வழி பணமில்லா பரிமாற்றங்களே சிறந்த தேர்வாக அமையும்.

2.இன்டர்நெட் பேங்கிங்
வங்கிக்கு செல்லாமலேயே இன்டர்நெட் பேங்கிங் வசதி மூலம் நாம் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

3.டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு மொபைல் ஆப்-கள் இப்போது உள்ளன. PayTm,tez போன்ற ஆப்-களில் பணப் பரிமாற்ற வசதிகளும் கிடைக்கின்றன.

4. ரொக்க டெபாசிட் இயந்திரங்கள் மூலம்
24 மணிநேரம் இந்த வசதியை கொண்டு  பணத்தை வங்கிக்கணக்கில் போடுவதற்கும் எடுப்பதற்க்கும்  பயன்படுத்தலாம்.
பணம் அனுப்பும் வசதியும் உள்ளது
பணத்தை எந்தவொரு வங்கி கணக்கிற்கும் உடனடியாக அனுப்ப முடியும்.

5.தபால் நிலையம்
இந்தியாவின் தபால் நிலையங்களிலும் வங்கி சேவைகள் உள்ளன.
எனவே, வங்கிகள் செயல்படாத இந்த நாட்களில் தபால் நிலையங்களின் வங்கி சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

6. தனியார் மணி டிரான்ஸ்பர் வசதி தற்போது பல இடங்களில் துவங்கபட்டுள்ளன. அதன் மூலமும் பணம் அனுப்பலாம்

Give Us Your Feedback