Breaking News

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு நாடு முழுவதும் தடை

அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் ஆன்லைனில் மருந்து பொருட்களை விற்பனை செய்ய தடை விதிப்பதாக டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 



நீதி மன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும் கோர்ட் அதிரடி  உத்தரவு

முறையான வழிகாட்டுதல் இன்றி தினமும் லட்சக்கணக்கான மருந்துகள் ஆன்லைன் மூலம் விற்கப்படுவதாகவும். டாக்டர்கள் பரிந்துரையின்றி இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதால் நோயாளிகள் பலர் பாதிக்கப்படுவதாக டில்லியை சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணர் ஜாகிர் அகமது என்பவர் டில்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். 

ஆன்லைனில் விற்கப்படும் பெரும்பாலான மருந்துகள் அனுமதி பெறாதவை எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். 


இந்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.


மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்
 





















Give Us Your Feedback