Breaking News

ஜோத்பூர் ஆட்டுகறி விவகாரம்: 5 பேர் கைது

அட்மின் மீடியா
0

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஆட்டிறைச்சி சென்னைக்கு கொண்டு வரப்பட்ட விவகாரத்தில் 5 பேரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் காந்தி தாம் என்ற இடத்தில் இருந்து 12 பார்சல்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு அனுப்பப்பட்டன.

இந்தப் பார்சல்கள் ஜோத்பூரில் மீண்டும் பார்சல் செய்து புதுப்பிக்கப்பட்டு ஜோத்பூர் விரைவு ரயிலில் சென்னைக்கு அனுப்பப்பட்டன.

அந்த இறைச்சியை  சோதனை செய்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் அந்த இறைச்சி கெட்டுபோய்விட்டது என்று தெரிவித்தனர்

ஆனால் அதற்க்குள் அந்த ஆட்டின் வாலை பார்த்து சந்தேகம் அடைந்த சிலர் அது நாய்கறி என்று வதந்தி பரப்பிவிட்டார்கள்.

ஆரம்பம் முதலே அட்மின்மீடியா அது நாய்கறி இல்லை ஆட்டுகறிதான் என்று ஆதாரத்துடன் பதிவிட்டது

http://adminmedia1.blogspot.com/2018/11/blog-post_21.html?m=1

இறுதியில் சோதனை முடிவில் அது ஆட்டிறைச்சி என்று உறுதி செய்தார்கள்.

இது தொடர்பாக காந்திதாமுக்கும், ஜோத்பூருக்கும் சென்று விசாரணை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் காந்திதாமில் இருந்து பார்சல்களை அனுப்பிய முன்னா குரேஷி, ஜோத்பூரில் பார்சல்களை பெற்று மீண்டும் சென்னைக்கு அனுப்பிய இம்ரான், சென்னையில் பார்சல்களை பெற பதிவு செய்யப்பட்டிருந்த ஜெய்சங்கர், ஜெயகணேஷ், உஸ்மான் பாஷா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

அவர்கள் மீது முறையாக பதப்படுத்தாமல் இறைச்சியை கொண்டுவந்தது, பயணிகளுக்கு இடையூறு உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://adminmedia1.blogspot.com/2018/11/blog-post_0.html

Give Us Your Feedback