Breaking News

நாளை முதல் பள்ளிகள் அனைத்தும் முடங்கும்

அட்மின் மீடியா
0

நாளை முதல் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் முடங்கும் அபாயம்



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4 முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடக்க உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.


ஜாக்டோ-ஜியோ என்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பாகும் .

 இந்த அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்


 ஊதிய உயர்வுக்குப் பிறகு வழங்கப்படாமல் இருக்கும் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்,

 ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், 

அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். 


இரு தினங்களுக்கு முன்பு 
தமிழக அரசுடன் ஜாக்டோ-ஜியோ சார்பில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

இதையடுத்து டிசம்பர் 4-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவது உறுதி என  ஜாக்டோ ஜியோ அறிவித்த்துள்ள்ளது

வேலை நிறுத்தம் ஆரம்பித்தால் பல பள்ளிகளில் ஆசிரியர் வரமாட்டார்கள் இதனால் பள்ளி மாணவ மாணவிகளின் படிப்பு கெடும்

மேலும் அரசு அலுவலகங்களிலும் வேலைநடக்காது என்ன நடக்கபோகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம்


Give Us Your Feedback