Breaking News

வீட்டில் இருந்து மாதம் 10,000/- சம்பாதிப்பது எப்படி

அட்மின் மீடியா
0
உங்களுக்கு தையல் தொழில் தெரிந்தால் வீட்டுக்கு அருகில் உள்ள டெய்லரிங் கடையில்  பட்டன் தைத்தல்ஹெம்மிங் செய்தல்எம்ப்ராய்டரி என்று  அவர்களுக்கு தைத்து கொடுத்து அதில் காசு பார்க்கலாம் மேலும்  பள்ளியில் மொத்தமாக ஆர்டர் எடுத்து யூனிஃபார்ம் தைத்துத் தரலாம்.

 


ஹோட்டல்கள் மிகுந்த ஏரியா என்றால்... இலை மற்றும் தண்ணீர் சப்ளை செய்வதற்கான வாய்ப்பை கேட்டுப் பெறலாம். சில ஹோட்டல் களில் மசாலா அரைத்துத் தருவதுபாத்திரம் கழுவித் தருவது போன்ற வேலைகளையே கான்ட்ராக்ட் ஆக தருகிறார்கள் அதையும் முயற்சிக்கலாம்.


நீங்கள் இருப்பது நகர்புறமாக இருந்தால் உங்களுக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து பசும் பால் வரவழைத்து விற்பனை செய்யலாம்வீட்டுக்குக் குறைந்த பட்சம் இரண்டு செல்போன் வைத்திருப்பார்கள். அதனால் ரீ-சார்ஜ் கூப்பன்கள் வாங்கி வைத்து வியாபாரம் செய்யலாம். மொத்தமாக நீங்கள் ரீ-சார்ஜ் கூப்பன் வாங்கும்போது சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திடம் இருந்து கமிஷன் கிடைக்கும்.

மொத்த விலையில் பாக்கெட் பால் வாங்கிநீங்களாகவோ அல்லது ஆள் வைத்தோ வீடு வீடாக பால் சப்ளை செய்யலாம். வீட்டில் எப்போதும் ஸ்டாக் வைத்திருந்தால் தேவைப் படுபவர்களுக்கு விற்கலாம்.

மேலும் வீட்டில் பால்,தயிர்மோர்தண்ணீர் கேன் மற்றும் பாக்கெட் மாவு போன்றவற்றை விற்பனை செய்தால் கூடுதல் லாபம்.
 
மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான ஆட்டோக்கள் வாங்கி வாடகைக்கு விடலாம்.
பள்ளியின் அனுமதியுடன் ஸ்டேஷனரி கடை வைக்கலாம்.

பள்ளிக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ ஜெராக்ஸ் கடை வைக்கலாம். கம்ப்யூட்டர் இருப்பின் பிரின்ட் எடுத்து தரும் வேலையையும் செய்யலாம்.
புத்தகங்களை பைண்டிங் செய்து தரும் வேலை நன்றாக கைகொடுக்கும்.


படித்தவர்களாக இருந்தால் டியூசன் வீட்டில் டியூசன் நடத்தலாம்.

பக்கத்து வீடுகளில்  அவர்களுடைய மின்கட்டனம் கட்டணங்களைச் கட்டிகொடுத்து கமிஷன் பெறலாம்.

உங்கள் வீட்டில் விசாலமான ஹால் அல்லது எக்ஸ்ட்ரா ரூம் இருந்தால்கம்ப்யூட்டர் கேம் ஆரம்பிக்கலாம். அக்கம் பக்கத்து குழந்தைகளை அழைத்து விஷயத்தைச் சொன்னால்... அந்த ஏரியாவுக்கே விஷயம் ஈஸியாக பரவிவிடும். மணிக்கு இவ்வளவு ரூபாய் என கணக் கிட்டு காசு பார்க்க லாம்.

மெழுகுவர்த்தி மெஷின் 1000 ரூபாயில் தொடங்கி 45 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. சிறிய மெஷினில் ஒரு மணி நேரத்தில் 55 மெழுகுவர்த்திகள் செய்யலாம். ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் பெரிய மெஷின் வாங்கலாம். இதில் 500 முதல் 1,000 மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம்.



மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்



Give Us Your Feedback