இன்கமிங் கால்கள் நிறுத்தகூடாது
அட்மின் மீடியா
0
இன்கம்மிங் கால்கள் நிறுத்த கூடாது : டிராய் உத்தரவு
மாதந்தோறும் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக் கூடாது என மொபைல்போன் ஆப்பரேட்டர்களுக்கு, டிராய் எச்சரிக்கை செய்துள்ளது
ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட மொபைல்போன் சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.35 க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே, இன்கம்மிங் அழைப்புகளை பெற முடியும அப்படி ரீசார்ஜ் செய்யாவிட்டால் இன்கம்மிங் அழைப்புகள் நிறுத்தப்படும் என்று அறிிவித்தது
இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்க்கு இது பற்றி ஏராளமான புகார்கள் குவிந்தன.
இதையடுத்து, குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சேவைகளை நிறுத்தக் கூடாது என டிராய் அறிவுறுத்தியுள்ளது.
நீங்கள் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்