Breaking News

ஜனவரியில் இருந்து கட்டாய நடைமுறை மத்திய அரசிடம் பதிவு செய்யாவிட்டால் வெளிநாட்டு வேலைக்கு போக முடியாது

அட்மின் மீடியா
0

ஜனவரியில் இருந்து கட்டாய நடைமுறை மத்திய அரசிடம் பதிவு செய்யாவிட்டால் வெளிநாட்டு வேலைக்கு போக முடியாது

எதற்க்காக இந்த நடைமுறை

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் பலர் அங்கு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் பலர் வேலை இழந்தும், அடிமைகளாக நடத்தப்படுகின்றார்கள்
ஆனால் அவர்கள் எங்கு வேலைக்கு செல்கின்றார்கள் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் எப்படி அவர்களை தொடர்பு கொள்வது என்பது மிகவும் பிரச்சனையாக உள்ளது எனவே அவர்கள் வேலைக்கு செல்லும் போது எங்கு வேலை செய்கின்றோம் என்று மத்திய அரசிடம் பதிவு செய்யவேண்டியது என மத்திய அரசு அறிவித்துள்ளது

யாருக்கெல்லாம் இந்த நடைமுறை

‘நான்-இசிஆர்’ எனப்படும் குடியேற்ற விசாரணை அவசியம் அல்லாத பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் வெளிநாட்டு வேலைக்கு  செல்லும்போது  24 மணி நேரம் முன்பாகவே www.emigrate.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

வெளிநாடு செல்லமுடியாது

வெளிநாடு புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பே www.emigrate.gov.in இணையதளத்தில் பதிவு செய்யாதவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்படுவார்கள். அவர்கள் வெளிநாடு செல்ல முடியாது.

எந்தெந்த நாடுகளுக்கு இந்த நடைமுறை

ஐக்கிய அரபு அமீரகம்,

சவுதி அரேபியா

பக்ரைன்,

குவைத்,

ஓமன்,

கத்தார்

ஆப்கானிஸ்தான்,

இந்தோனேசியா,

தாய்லாந்து,

மலேசியா,

ஈராக்,

ஜோர்டன்,

லிபியா,

லெபனான்,

சிரியா,

ஏமன்,

சூடான்,

தெற்கு சூடான்

ஆகிய நாடுகளுக்கு இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாடுகள் அனைத்தும் இஸ்லாமிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உதவி மையத்தை அணுகலாம்.

அல்லது 1800 11 3090 

01140503090 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

helpline@mea.gov.in முகவரிக்கும் இமெயில் அனுப்பி விளக்கம் பெறலாம்

Give Us Your Feedback