சிறிசேனா கட்சியில் இருந்து விலகினார் ராஜபக்சே
அட்மின் மீடியா
0
இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக அதிபர் சிறிசேனாவின்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார்.
இலங்கையின் அதிபர் உள்ள சிறிசேனா ராஜபக்சேவை பிரதமராக
அறிவித்தார் அதற்கான நம்பிக்கையில்லா தீர்மான
வாக்கெடுப்பில் வெற்றிபெற முடியாது என்றவுடன் தேர்தலை சந்திக்க திட்டமிட்டு
நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார் அதிபர் சிறிசேனா.
இதனால் அங்கு பெரிய அளவில் அரசியல் குழப்பம் நிலவி வருகின்றது. அங்கு பிரதமர்
பதவிக்காக ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. மேலும் நாடாளுமன்றம் கலைத்தது சட்டவிரோதம் என்று முன்னாள் பிரதமர் நீதிமன்றத்தில் வழ்க்கு தொடுக்கௌள்ளார்.
இந்த நிலையில்தான் இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக
சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகினார் ராஜபக்சே.
இவருடன் இவரது மகன் நமல் ராஜபக்சேவும் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
மேலும் ராஜபக்சேவுடன் முன்னாள் எம்.பிக்கள் 50 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்
இருந்து விலகி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.
மேலும் இவர்கள் அனைவரும் இலங்கை பொதுஜன முன்னணி
கட்சியில் இணைந்தனர்.
