Breaking News

மனிதாபிமானம் இல்லையா உங்களுக்கு

அட்மின் மீடியா
0

பீகாரில் இஸ்லாமியர் உயிருடன் எரித்து கொலை

வடமாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது மதத்தின் பெயரால் கொடூர தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

தற்போது பீகார் மாநிலத்தில் இஸ்லாமியர் ஒருவர் கூட்டாக தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலம் சீதாமாரி பகுதியில்  கடந்த அக்டோபர் 20ஆம் தேதி துர்கா பூஜை ஊர்வலம்  இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில்  செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

நுழைவு மறுக்கப்பட்டதால்  ஊர்வலமானது சாலையில் திரும்பியது  கடைகளை அடுத்து உடைத்தார்கள்
போலீஸ் கண்முன்னே நடந்தேறியது

அபோது  அவரது மகள் வீட்டிலிருந்து
தன் ஊருக்கு  திரும்பிய 80 வயதான ஜினுல் அன்சாரி அக்கும்பலால் அடித்து,கழுத்தறுத்து பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டார்

இரண்டு நாட்களுக்குப் பிறகு, தன் தகப்பன் வீட்டிற்கு வரவில்லை  காணாமல் போய்விட்டார் கண்டுபிடித்து தாருங்கள் என்று காவல்துறையில் புகார் கொடுத்தபோது விசாரனையில் தான் இது தெரிந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 38 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது 6 எப்ஐஆர்-கள் போடப்பட்டு இருக்கிறது.

மேலும் எந்த ஒரு தமிழக ஊடகமும் இதுவரை வெளியிடவில்லை 


Give Us Your Feedback