Breaking News

நேரம் தாண்டி பட்டாசு வெடித்தால் என்ன தண்டனை

அட்மின் மீடியா
0

தமிழகத்தில், தீபாவளி அன்று 

காலை 6:00 முதல் 7:00 மணி வரையும்,

இரவு 7:00 முதல் 8:00 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, அந்தந்த காவல் நிலைய பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில், அனுமதிக்காத நேரத்தில் பட்டாசு வெடிப்பது கண்டறியப்பட்டால் முதலில் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும்

மீறும்பட்சத்தில், இந்திய தண்டனை சட்டம் 188 பிரிவில் நடவடிக்கை எடுக்கலாம்.

அதாவது, அரசின் உத்தரவுக்கு கீழ்படிந்து நடக்காதது என்ற அடிப்படையில்
ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கலாம். இவை இரண்டையும் சேர்த்தும் விதிக்கலாம்.

மேலும் உச்ச நீதிமன்றம் வரையறுத்த நேரம் தாண்டி பட்டாசு வெடிப்பவர்கள் மீது ஒவ்வொரு ஸ்டேஷன் லிமிட்டிலும் வழக்குப் பதிவு செய்து வைப்பார்கள்

தடை செய்யபட்ட நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டது என்று உச்ச நீதிமன்றம் கேட்டால் தருவதற்காக எனவே தடை செய்யபட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்காதீர்கள்

Give Us Your Feedback