Breaking News

தமிழகத்தை மிரட்டிய கஜா கரையை கடந்தது

அட்மின் மீடியா
0

கஜா புயல் வேதாரண்யம், நாகை இடையே  முழுமையாக கரையை கடந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவ., 9ல், உருவான கஜா புயல்  வேதாரண்யம் -நாகை இடையே 12 மணீக்கு கரையை கடக்கும்அப்போது, மணிக்கு, 100முதல்110 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும். புயலின் கண் பகுதி கரையை தொடும் என, வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு எச்சரித்திருந்தது.

நள்ளிரவு இரவு 2: 30 மணியளவில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாதவது, கஜா புயல் முழுமையாக கரையை கடந்துவிட்டதாக தெரிவித்தது.

புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ராமேஸ்வரத்தில் கனமழை காரணமாக பாம்பன் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கஜா புயல் காரணமாக 7 மாவட்டங்களில் 431 மையங்களில் 85698 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Give Us Your Feedback