பிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு இந்திய கப்பற்படையில் வேலை
அட்மின் மீடியா
0
இந்திய கடற்படை பிளஸ் டூ முடித்தவர்களை அதிகாரி பணிக்கு நியமிக்கும் ‘பி.டெக் கேடட் என்ட்ரி ஸ்கீம்- ஜூலை 2019’ என்ற பயிற்சித் திட்டத்தில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கு 4 ஆண்டு காலம் பி.டெக் பயிற்சி வழங்கப்படும்.
பி.டெக் படித்ததற்கான சான்றிதழும் வழங்கப்படும்.
பின்னர் உடனடியாக கப்பற்படையில் அதிகாரியாக பணியமர்த்தப்படுவாராகள்.
வயது : 17 வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் டூ கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களில் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் அவர்கள் நடத்தும் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்பி நடத்தும் இரு நிலைகளில் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2018
மேலும் விவரங்களுக்கு https://www.joinindiannavy.gov.in
Tags: வேலைவாய்ப்பு