படு தோல்வியடைந்த ராஜபக்ஷே ரணில் மீண்டும் பிரதமர் ஆனார்
அட்மின் மீடியா
0
இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில்க்கும் இடையேயான சச்சரவில் கடந்த மாதம் 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரனிலை நீக்கிவிட்டு முன்னாள்
அதிபர் ராஜபக்சேயை பிரதமராக சிறிசேனா உத்தரவிட்டார்.
மேலும் ராஜபக்சேக்க்வுக்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைக்காததால் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டார்.
நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர்
அறிவித்தார். நாடாளுமன்ற
கலைப்பை எதிர்த்து ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசியக்கட்சி உள்பட
பல்வேறு தரப்பினரும் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை
தொடுத்தனர். அந்த வழக்குகளில், தலைமை நீதிபதி நளின் பெரேரா தலைமையிலான
அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.
இதன்
முடிவில் நாடாளுமன்ற கலைப்புக்கு தடை விதித்து நீதிபதிகள் அதிரடியாக
உத்தரவிட்டனர்.
இந்த
நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூட்டப்படும் என்று
அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். அதன் படி இன்று
காலை நாடாளுமன்றம் கூடியது
இந்த நிலையில்
ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பெரமுனா
கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.
நம்பிக்கை
இல்லாதீர்மானம் கொண்டுவந்த நிலையில் ராஜபக்சே அவையில் இருந்து
வெளியேறினார். ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில்
வெற்றி பெற்று உள்ளது.
ராஜ பக்சேவுக்கு எதிராக் 122 எம்பிக்கள் வாக்களித்துள்ளார்கள். எனவே ராஜபக்சேவிற்க்கு பெரும்பான்மை இல்லை என ரணில் தரப்பு சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்து உள்ளார்.
மீண்டும் நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்து உள்ளார்.
